இவன்தான்..அட்சய பாத்திரம்..!

சாபங்களை
தவங்களாக்கி
வரம் கொடுப்பவன்!
வறண்ட பூமிக்கும்
வாழ்க்கை தருபவன்!
உலகின் பசி துடைக்க
உழைப்பவன்!
உண்ண உணவும்.. உடுத்த உடையும்
இல்லாமல் உழல்பவன் !
வரப்பே தலையணையாய் ..
வான்வெளியே கூரையாய்
பசும்புல்லே பாய் விரிப்பாய்..
தொலைந்துபோன வாழ்க்கை..
தொடர்ந்து வரும் கனவு..
நாளையென்ற நம்பிக்கை..
தபால் வருமா என்று
தபால்காரரை எதிர்நோக்கும் தாயைப்போல்.
மழை வருமா?
காத்துகிடக்கும் தவயோகி!
இன்று அழிந்து போனவன்...
நாளை..
நிச்சயம் இவன்தான்..அட்சய பாத்திரம்..!
நிலத்திற்கு வளத்தையும்..
மனிதர்களுக்கு உணவும்..
கவிஞ்சர்களுக்கு கவிதையும்
தரும் உழவன்
வாழ்க்கைமட்டும்
எண்ணெய் இல்லா விளக்குகளாகவே
ஏங்கி கொண்டிருக்கிறது!