கைகாட்டிமரம் (ஆசிரியர்)
![](https://eluthu.com/images/loading.gif)
தொடங்கும் இடம்
தெரியாமல் தவித்தேன்,
தொடக்கம் தந்தாய்
எனக்கு...
தொடங்கிய இடத்திலேயே
நீ,
தொடமுடியாத இடத்தில்
நான்...
தொடங்குகிறேன்
என் ஆசானே
உன்னிடமிருந்து
உன்னை பற்றி
உனக்காக
ஒரு கவிதை...
தொடங்குகிறேன்
உன்னிடமிருந்து...
நட்சத்திரம் நான்
வெண்ணிலா நீ,
30 ௦நாலும்
மின்னுகிறேன் நான்,
உனக்கு மட்டும்
தினமும்
வளர்பிறையும் தேய்பிறையும் ...
பம்பரம் நான்
சாட்டை நீ,
சுற்றும்
என்னை பார்கிறார்கள்,
சுற்றிய உன்னை
மறக்கிறார்கள்..
மிதிவண்டி நீ
மிதிப்பவன் நான்,
பந்தயத்தின் முடிவில்
மேடையில் நான்
மூலையில் நீ...
கண்டதை எழுதி
கவிதை என்றேன்,
உள்ளதை எழுது
கவிதையாகும் என்றாய்,
இன்று
கவிஞனாய் நான்
ரசிகனாய் நீ...
படிக்கட்டு நீ
என்னை
ஏற்றி வைக்கிறாய் ,
மிதிபடுகிறாய் நீ..
உன்னை நான்
மதித்ததில்லை,
அதுவே
உன்னை
மிதித்ததற்கு சமம்...
இபொழுது
உணர்கிறேன்,
மன்னிப்பு கேட்கிறேன் ,
எனக்குத்தெரியும்
மன்னிபதற்குமுன்
அதை
மறந்திருப்பீர்கள் என்று...
என்றும் அன்புடன்
ப.சுரேஷ்...