கையில் ஒரு ரோஜா

கையில் ஒரு ரோஜா
===============================================ருத்ரா

ஒரு காதலன்
ஒரு காதலியை
விரட்டி விரட்டி
காதலித்தான்.
கல்யாணமும் நடந்தது.
மூச்சு இரைக்க ஓடியது போதும்.
உட்கார் கண்ணே!
உனக்கு என்ன வேண்டும்?
கேள் தருகிறேன்.
அவன் கேட்டான்.
அந்த "மின்னல்"
பளிச்சென்று கேட்டது.
"விவாகரத்து"
அவனோ
பதறவில்லை.
இவ்வளவு நாளாய்
இது ஒரு கை ஓசையா?
இன்னொரு அவனது கை
அங்கே வெட்டுண்டு கிடந்தது.
இருப்பினும்
அந்தக்கையில் ஒரு ரோஜா!
"விவாகரத்தை" கொடுத்தான்.
அதற்கு அடியில்
ஒரு ரோஜாவையும் நீட்டினான்.
அதே கையில் அதே ரோஜா!
."கல்யாணத்துக்குத் தான் ரத்து
காத‌லுக்கு இல்லை.
ப‌ய‌ப்ப‌டாதே.
இது முள் இல்லாத‌ ரோஜா
உன்னை என்றுமே
காய‌ப்ப‌டுத்தாது."..என்றான்.
அந்த ரோஜா
எங்கிருந்தாலும் வாழ்க‌
என்று மௌனமாக ஒலித்தது
அவ‌ளும் அதை வாங்கிக்கொண்டாள்
முன்பு வாங்கிய‌ ரொஜாக்க‌ளை எல்லாம்
அவ‌ள் கூந்த‌ல் வாங்கிக்கொண்ட‌து.
இப்போது
ஒரு சாமி ப‌ட‌ம் வாங்கிக்கொண்ட‌து.

=======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (16-Sep-12, 9:17 am)
Tanglish : kaiyil oru roja
பார்வை : 128

மேலே