இது என் ஆதங்கம்......

கூகுள் இணையத்தளம் தமிழ் பயன்படுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறது நீங்கள் பயன்படுத்தியதுண்டா????
இப்பொழுது அணைத்து கை பேசியிலும் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது நீங்கள் பயன்படுத்தியதுண்டா ????
நான் தமிழில் பயன்படுத்திப்பார்தேன் ......... எவ்வளவு இனிமையான நாம் மறந்த வார்த்தைகள் சேர்கப்பட்டுள்ளது....

நான் தமிழ் மொழியை பயன்படுத்தியதற்கு என் நண்பர்களிடம் இருந்து கிடைத்த விமர்சனங்கள் இதோ.....
௧. மச்சி உனக்கு இங்கிலீஷ் தெரியாத ????
௨.டாய் இங்கிலீஷ் ல மாத்தி கொடு டா ஒன்னும் புரியல நான் ஒரு கால் பண்ணனும்.....
௩. என்ன டா அசிங்கமா தமிழ்ல வெச்சுருக்க கூகுள் ல ????
௪.இன்னா மச்சி மொக்கையா தமிழ் ல வச்சுருக்க மொபைல் ல ?????
5. டேய் இங்கிலீஷ் ல ரிப்ளே பண்ணுடா (என் காதலியின் பதில்)

நான் தெரியாம தான் கேக்றேன் நீங்கலாம் என்ன அமெரிக்கால பொறந்த அப்பா டக்கர் னு நினைப்பா ????
என்ன கொடுமடா இது.... நான் தமிழ் நாட்ல இருக்கேனா இல்ல வேற எதாச்சும் ஊர்ல இருக்கேனான்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு ...
பல ஆயிரம் சாப்ட்வேர் நிறுவனம் இருக்கிற ஐ.டி சிட்டி(IT CITY) னு சொல்ற பெங்களூர் போனிங்கனா பஸ்ல கன்னடம் தவிர வேற மொழிய பாக்க முடியாது ..... ஏன் அந்தர மாநிலத்துல ஒரு பஸ்ல அடுத்தவர் உதவி இல்லாம ஏறிடுங்க பாக்கலாம்... ஏன் நம்மோட நாட்டின் தலைநகரம் புது டெல்லி அதுலயும் மெட்ரோ பஸ்ல ஹிந்தி மட்டும் தான் இருக்கும் , இங்கிலீஷ் இல்ல.......

நாம்மலாம் உலக மக்கள் போற்றக்கூடிய தமிழ் சமுதாயத்துல வந்தவங்க டா .......... தமிழ் பயன்பாட்டுல இருக்கற எத்தன நாடு இருந்தாலும் .... அதன் ஆரம்பம் தமிழ்நாடுனு பெருமையா பேசிட்டு திரியுற இந்த ஊர்ல தான் நாம அதன் பயன்பாட முழுசா மொடக்கி கண்ணாடி பொட்டிக்குள்ள பொருட்காட்சி ல வெச்சுடுவிங்க டா ........

இது என் ஆதங்கம்.......

உண்மை தமிழர்களாக இருந்தால் ....


♫♪░L░I░K░E░♫♪
♫♪░T░H░I░S░♫♪
♫♪░P░A░G░E░♫♪

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (16-Sep-12, 2:31 pm)
சேர்த்தது : நெய்வேலி ஆனந்த்
பார்வை : 224

மேலே