எரிகிறது ஆழி! அதுவும் இலக்கணப்போலி!

பச்சைத் தமிழ்
வள்ளுவ ஏட்டிலே!
கொச்சைத் தமிழ்
பல்லவ நாட்டிலே!

செம்மறி விற்று
கற்றது
தமிழ் எம்.ஏ.
கைத்தறி கற்று
செம்மறி
மேய்க்கச் செய்தது
தமிழக எம்.ஏ.

செங்கல் சூளையிலே
வெம்மை!
அதினிலே
வேகிறது
என் தமி ழம்மை!...

செவ்வாய்
கிரகத்திலே செய்த
பொம்மை
(செயற்கைக்கோள்)
தமிழ்
சமிக்ஞை யின்றி
செய லிழக்கிறதே
உண்மை!

காக்கை தட்டி
விரிந்தநீர்
காவிரி நீர் அம்மே!
நின்னை காக்க
திரை விரிநீரில்
சிறு
காக்கை கூடும்
இல் லையேஅம்மே!.

அகத்தியனின்
விணை
அட்சய ஒலி
எழுப்பிடும் அம்மே!
அட்சய ஒலியும் நீ
என்
அட்சய மொழியும் நீ அம்மே!..

பிரபஞ்சத்தின்
பிற்பகுதி
பிய்ந்து தொங்குகிறது
அம்மே!
அதினைத்தாங்கி
கொண்டு
தமிழ்ப்பஞ்சம்
தலை
விரித் தாடுகிறது
என் அம்மே!...

அறிவியல்
சொற் றொடர்
ஆவியை
எழுப்பு வதில்லை
என் அம்மே!
அதினாலே
ஐன்ஸ்டின் ஆவியும் அனாதை யானதே,
அம்மே!

நின் ஆவி
எங் கென்று
தேடுகிறாயோ அம்மே!
என் ஆவி
ஓயும் வரை
தமிழ்
வெள்ளாவியிலும்
வெளுப்பதில்லை
அம்மே!....

மூவெழுத்தில்
நின்
ஓருயிரும் அம்மே!
நின்
ஓரெழுத்தில்
என்
ஆறுயிரும் அம்மே!

ஓ ரிருபதில்
என் ஆட்டம்
அடுத்து வரும்
அறு பதில்
ஓட்டம் அம்மே!

ஈராயிரம் இருபது
வென்ற
உனக் கே தினி
அறுப தென்றே
நினைத்தேன்அம்மே!

இலக்கியச் சீமந்தம்
நடக்கையிலே
இலக்கணப் போலிகள்
நின்
வலக்கையிலே
ஆழியாக
கண்டேன் அம்மே!
அது
ஆழி யில்லை
குளிக்க வந்த
அந்நியன்
தவற
விட்டுப் போன
திருட்டுப் போலி
அம்மே!

நின்
கருவில் விழுந்த
கல் லொன்று
எனைத் தெருவில்
கொண்டு
போக விடுமோ
என் அம்மே!

தெருவில்
கிடக்கும்
தமிழ் சொல் லொன்று
எனை
நின் கருவில்
கொண்டு போய்
சேர்க்குமோ
என் அம்மே!

எழுதியவர் : ருத்ரா-Mr.dreams (16-Sep-12, 7:17 am)
பார்வை : 221

மேலே