தீப்பா

அது ஒரு போக்குவரத்து இல்லாத கிராமம்.

ஊராட்சி அலுவலகம் செல்ல வேண்டும்

என்றால் ஒற்றையடிப் பாதையில் எட்டு

கி. மீ. நடக்க வேண்டும்.‌ விவசாயக் கூலி

வேலை செய்பவர்களும் புன்செய்

நிலத்தில் பயிரிடுவோருமே நிறைந்த

கிராமம்.

அந்தக் கிராமத்தில் உள்ள வேலாயி

பாட்டி வீட்டில் நடக்கும் உரையாடல்:

டேய் முருகையா, கொள்ளுப் பேரா நாஞ்

சொல்லறதைக் கொஞ்சம் தட்டாமல்

கேளுடா.

@@@@@

சொல்லுங்க கொள்ளு பாட்டி..

@@@@@##


.நம்ம பங்காளி மாகாளி வீட்டுக்கும்

நமக்கும் அம்பது வருசப் பகை. அந்த

ஆளுக்கும் நமக்கும் போன வருசம் வந்த

சண்டையின் போது "என்னிக்கா

இருந்தாலும் உங்க வீட்டை தீ 🔥 வச்சுக்

கொளுத்தாம விடமாட்டேன்"னு

சொன்னான்.

@@@@@@@

அவரு கெடக்கறாரு விடுங்க ‌பாட்டி.

#@@@@@@

இல்லடா அவன் விசப் பாம்பு. காலைச்

சுத்தற பாம்பு கடிக்காம விடாதுனு

சொல்லுவாங்க. அதுக்கு அறிகுறியா

போன வாரம் அவன் கொள்ளும் பேரனுக்கு

பொறந்த பெண் குழந்தைக்கு 'தீப்பா"னு

(தீபா) பேரு வச்சிருக்கிறான். இது போன

வருசம் நடந்த சண்டையில நமக்கு அவன்

சொன்ன எச்சரிக்கைக்கு அறிகுறி.

@@@@@@@

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

பாட்டி.

@@@@@

நீ தான்டா செல்லம் என்ற கொள்ளுப்

பேரன். நாம் நம்ப பங்காளி மாகாளிக்கு

பதிலடி குடுக்கிற மாதிரி பேரை நேத்துப்

பொறந்த உன்ற பெண் கொழந்தைக்குப்

பேரு வைக்கணும்.

@@@@@@

எனக்கு ஒண்ணும் புரியல பாட்டி‌

@@@@@@

மாகாளி அவள் பேத்திக்கு தீப்பானு

பேரு வச்சிருக்கிறான். அந்தப் பேருக்குப்

போட்டியா நீ உன்ற பொண் கொழந்தைக்கு

'நெருப்பா'னு பேரு வைடா பேரா. யாராவது

கேட்டா 'நெருப்பா' இந்திப் பேருனு

சொன்னாப் போதும் நம்ம ஊரு மக்கள்

எல்லாம்"நெருப்பா 'சுவீட்டு நேம்"னு

சொல்லிடடுவாங்க.

@@@@@@@

அருமையான பேரு பாட்டிம்மா.

எழுதியவர் : மலர் (27-May-24, 11:48 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 16

மேலே