பட்டாசு தொழிலாளனின் உருக்கம்
வறுமையின் குடிமகனுக்கு தெரிந்த ஒரே தொழில்
பட்டாசு செய்வது .
என் கூட்டில் பல கிளி இன்று இல்லை
இருந்தும் கூட்டை விட்டு வெளியேற துடிக்கிறேன்
சுடும் என தெரிந்தும் கரம் நீட்டுகிறேன்
என் உறவையும் என் ஆசையும்
விலைகொடுத்து வாங்கினாய்
என் தீபத்தை அணைத்து
உன் வீட்டில் விளக்கை ஏற்றினாய்
கருகி போன என் கைகளை பார்
உன் வீடு வாசலில் குப்பையாய் சிதறி கிடக்கிறது
உன் குழந்தை மகிழ
என் குழந்தையின் கல்வியை பறித்தாய்
எங்கள் உள்ளங்கள் கொடுத்து
பல வண்ணங்கள் செய்தோம்
உன் கண் குளிர !
விழுந்தது பொறிகள் இல்லை
எங்கள் கண்ணீர் துளிகள்
ரசாயனம் சுருட்ட பட்ட காகிதத்தில்
எங்கள் குழந்தையின் கனவுகள் மக்கிபோயின
கடைசியில் பொங்கியது
எங்கள் வீட்டு சோறு இல்லை
உங்கள் வீட்டு பூதொட்டி (புஸ்பானம் )
ஒருநொடியில் அழிந்து போகிற பொருளுக்கு
எங்கள் முழு வாழ்கையை அற்பணிதோம்
யார் தொடங்கின வேலை இது ?
யார் ஏற்றின தீபம் இது ?
எங்கள் வாழ்கையில் கொழுந்து விட்டு எரிகிறதே
அணைக்க கரம் நீட்டுங்கள்
வெடிக்க பணம் நீடாதிர்கள் .