பாட்டி எங்க பாட்டி
பாட்டி எங்க பாட்டி
பாசக்காரப் பாட்டி
வெள்ளித் தட்டு எடுத்து
நெய்யும் சோறும் போட்டு
ஆடும், மாடும் காட்டி
ஆசையாக ஊட்டிவிடும் பாட்டி!
வான் நிலவைக் காட்டி
பால் குடிக்கச் செய்யும் பாட்டி
தாலாட்டுப் பாடி
தொட்டிலில் இட்டு இரவில்
தூங்கச் செய்யும் பாட்டி
பாட்டி எங்க பாட்டி!