எரிகின்ற சருகு எடுத்துக்காட்டாய்................
அரும்பியபோது ஏதுமறியாது
குறும்புகளோடு துளிர்விட்டு
சுகமாய் சுமந்துவிட கிளையுண்டு
கபடமேதுமின்றி வளர்ந்துவிட்டு
இளமையோடு துள்ளிய
இன்புற்ற காலங்கள் கடந்து
முதிர்ச்சியிலும் குறையாத
முறுக்கோடு வாழ்ந்துவிட்டு
முதுமையாய் தளர்ந்து
முற்றிலும் சுருங்கி
வலிமையிழந்து தள்ளாட
இன்றோ நாளையோ என
தடுமாறும் போராட்டத்தில்
மரணம் இறுதியில் வென்றுவிட
செந்தழலில் எரிகின்றது
தேவையற்ற குப்பையாய் !!!