துதிக்கை தொப்பையன்

கையால் பிடித்துவைத்த அனைத்திலும் நீ இருப்பாய் ,
கைப்பிடி அளவுள்ள இதயத்திலும் நீ உள்ளாய் .

அரச மரத்தினடியில் நீ இருக்கிறாய் - பல
அரசர்களின் மனதில் அடி வைத்திருக்கிறாய்

எதை துவங்குமுன்னும் உன் சூட்சம சுழியை இட்டு
வென்றிடுவோம் அப்பணியை சரியாகச் செய்து

சேவலின் கருவால் சிறகாம் உன்னிரு புருவம்
வேல் போன்ற கூரிய பார்வைகளாம் உன்னிரு கண்கள்

அழகனுக்கு அண்ணனடா உன்னழகைக் கூறவேண்டுமோ
அவனியே அம்மையப்பனென ஆன்றோர்க்கு அறிவுறுத்தினாய்

ஐந்தறிவுடைய யானையின் முகமாம்
ஆறறிவுடைய மனிதனின் உடலாம்

மூளை மட்டும் எத்தனை அறிவுடையதோ
கூற இயலவில்லை இறைமையே உன் ஞானத்தின் மதிப்பை

அகத்தியரும் உனைக்கண்டு தான் தொப்பை வளர்த்தாரோ
அகவுணர்வு அற்றவரும் தொப்பை வளர்கின்றனரே

அறுசுவை உணவை தினமும் ருசிக்கும் அவ்வயிற்றுக்கு
ஆவணி சதுர்த்தியில் மட்டும் அரிசிமா
கொழுக்கட்டையாம்

சமுதாயத்தின் ஏளனச் சிரிப்பை முறிக்கத்தான்
மூஞ்சூரை வாகனமாக்கினீரோ

நீயாரெனக் கேட்கும் அனைவருக்கும் பிள்ளை எனபதில் கூறி
அவர் காதில் விழாமல் மீண்டும் யாரென எழுப்பிய வினாவைக்கண்டு
என் விடை ,உன் வினா என விளையாடிச்செல்லும் நாயகரே விநாயகரோ

சித்தி புத்திக்கு கனமான பதியாம் நீரே -- என்பதனால்
கணபதி என மாறினீரோ

மடியில் அமர்ந்திருக்கும் எக்குழந்தையும் உமது வடிவிலே
எப்படி இருப்பினும் நீரமர்ந்திருக்கும் நளினம் எத்தொப்பை நாயகராலும் அமர இயலாது

பிடித்து வைத்த பிள்ளை யார்போல அமர்ந்திருக்கிறாய்
என பிள்ளைகளுக்குக்கூட தங்கள் பட்டமே சூட்டப்படுகிறது

அவர்களை உங்களைப்போன்றே மூல முதல்வனாக்குங்கள்.
முக்தி வேண்டும், முகிலனே! நீ இருக்கும் மனங்களுக்கெல்லாம்.

எழுதியவர் : சுகந்த் (19-Sep-12, 6:24 pm)
பார்வை : 131

மேலே