வாழ்க்கை செலவு

வாழ்க்கைக்கு துணை வேண்டி
அவளுக்கு மூன்று முடிச்சி.
வாழ வழியின்றி
அவன் ஆண்மைக்கு ஒரு முடிச்சி.
விரட்டிச் செல்லும் விலைவாசி
மிரட்டிச் சொல்லும்,
வக்கற்ற உனக்கெல்லாம்
வாரிசு ஒரு குறையா என்று?

எழுதியவர் : S.Raguvaran (19-Sep-12, 11:04 pm)
சேர்த்தது : Raguvaran
Tanglish : vaazhkkai selavu
பார்வை : 156

மேலே