வேண்டாம் இந்த நகரம்(நரகம்)....!!

பார்க்குமிடமெல்லாம்
பாரிய
பெரிய
கட்டிடங்கள்...
கற்றையாய்
கலைந்த கூந்தலூடே
குட்டைப்பாவாடைப்பெண்கள்
கூட்டம்...
சாலையோர
சாரலில்
நாற்பதுகளைக்கடந்தும்
நடைபயிலும் தொந்தி கணபதிகள்...
கார்களில் பவனிவந்து
வீதிக்கரையோர கீரை வியாபாரிகளிடம்
பேரம் பேசும் பணக்கார
கனவான்கள்...
மின்கம்ப
நிழல் இருட்டைக்கூட
விட்டுவைக்காமல்
சுற்றம் மறந்து
கை பற்றும், வாயொற்றும்
வாலிபக்கூட்டம்...
ஓ....
இவைகள்தான்
நகரங்களின்
பிம்பங்களோ...??!!
நின்று
நிதானித்து
நிதர்சனத்தை
நினைத்துக்கொண்டேன்...
சக்கர நாற்காலியை
கைகளுடன் சேர்ந்து
மனதும் வலிக்க
சுழற்றுகிறேன்...
வேண்டாம்
இந்த நகரம்(நரகம்) என்று.