காதலை அறியுமா அவள் மனது?

பட்டு பூச்சி மொத்தமும் சேர்ந்ததா உன் முகம்
மெது மெது மெதுவென என் கண்ணுக்குள் அசையுதடி ..

புல்லரிக்கும் சிந்தனை உன்னை தொட்டு பார்க்க சொல்லுதே
உன் கிட்ட வந்து நின்னாக்க நீ சுட்டெரிக்கும் சூரியன் ..

நாக்கலாம் பூச்சிபோல நரம்பெல்லாம் நெளியுதடி
சாக்கு போக்கு சொல்லி தட்டான் பூச்சியாட்டம் ஏன் பறக்கிறாய்..

ஒரு விழி மூடி என்னைப் பார்த்து நீ போகையில்
மகிழ்ச்சியில் விண்ணைத் தொட்டு திரும்புதடி என் இதயம் ..
சல்லடை போட்டு சலித்த சிரிப்பைக் கொட்டி
கோழிச் செல்லாட்டம் உடம்பெல்லாம் ஊருகிறாய்..

இத்தனையும் செய்து விட்டு எப்படித்தான் உறங்குகிறாள்
இப்படி புலம்புவதை அறிந்திடுமா அவள் மனது...

அணையில் தண்ணீர் தேங்கினால் நிரம்பி வழியும்
என் மனதில் தேங்கிய அமுத காதல் கூட
ஓர் நாள் அவள் செவியில் வழியாதோ....

இரவில் மட்டுமே மலரும் அல்லி மலர் போல
தினம் கனவிலாவது வந்து எனை அள்ளி அனைப்பாலோ..
காய்ச்சி வச்ச பாலாட்டம் காயுதடி என் இதழ்கள்
மூச்சிரைக்க ஓடி வந்து முத்தமிடு என் காதலியே...
என்றே கார்த்திருக்கும் இந்த காதலனின்
காதலை அறியுமோ அவள் மனது அல்லாது
அவள் காய் அரியும் அரிவாழ்மனையவது
அறிந்திடுமோ.....

எழுதியவர் : சி.பொற்கொடி(அறியுர்பட்டி- (21-Sep-12, 10:35 am)
சேர்த்தது : porkodi
பார்வை : 242

மேலே