உன்னால் பழுதான என் இதயம்

பழுதடைந்த என் இதயத்திற்கு பதில் என்று கூறப்போகிறாய்?
பகல் முழுவதும் உழைத்த ஊதியமெல்லாம் உன்னாலே...
அரசாங்க கஜானா செல்கிறது டாஸ்மார்க் வாயிலாக
உழுது சம்பாதித்த என் தந்தையின் பணமும்
நடுகை நட்ட அன்னையின் சிறுவாட்டு பணமும்
மூதயரின் மருத்துவத்திற்கே செலவாகி போக....
கால்வயிறு கஞ்சியோடு படித்திருக்கும் என் அம்மையப்பன்,
சூரியன் உதித்து விட்டால்
யார் அழைப்பார்கள் வேலைக்கு
என்றே அரை நிலை தூக்கத்தோடு விழித்தே உறங்க
மறுபுறம் என் போக்கினை நினைவில் கொண்டு வர
இருந்த பாதி தூக்கமும் கழைந்து போகிட
என்றுதான் விடியுமோ என் மகனின் இருட்டு குணம் ஐயோ இறைவா !..
என் புதல்வனுக்கு புத்தி கொடு என அழும்
என் அம்மாவின் கண்ணீருக்கு நீதான் காரணம்....

இத்தனையும் எதற்கு சொல்கிறேன் உன்னிடத்தில்,,,
நான் தறுசாபோனது உன்னாலே...
உன்மீது கொண்ட ஆசையினாலே...

உன்மீது வந்த மோகத்தை காதலாக்கி
உன் இதய பாதத்தில் சமர்பித்த
என் புனித காதலை பெண்ணே..
வெறுப்பு கொண்டு செருப்பாலே
எனை மிதித்து தள்ளினாய்...
கருப்பாக நானிருப்பதால் பெண்ணே
சிறப்பான பதில் ஒன்றை கூறினாய்
சிவப்பான உன் நிறம் வேண்டவே வேண்டாம்...

பிடிக்காத காரணம் இதுதான் என்று உணர்த்தியிருக்கலாம்,
இன்றுவரை பதிலே கூறாமல்
ஏனடி பாடாய் படுத்துகிறாய்..

என் விழியில் நீ விழுந்தது உன் தவறா?
உன்னிடத்தில் காதல் கொண்டது என் தவறா பெண்ணே?
ஏன் இப்படி எனை சமுதாயத்திற்கு பைத்தியகாரனாகவும்,
என் குடும்பத்திற்கு குடிகாரனாகவும் மாற்றி விட்டாய்....
நன் படித்தவள் ஆனால் நீ?
என்று கேவலமாய் கூட பேசு
தினமும் எனை திட்டுவதற்காகவே
ஐந்து நிமிடங்கள் பேசடி பெண்ணே
அந்த சில நிமிடங்கள் என் காதலுக்கு போதும் அன்பே...

தினம்தோறும் உன்னை காண தவிக்கும் என் இதயம்,
உன்னை மணம் புரிந்து யாரேனும் கொண்டு சென்றுவிட்டால்
என்ன செய்யும் என் இதயம் துடிப்பதை நிறுட்திவிடுமோ? நாணறியேனடி .....

சாலையோரம் நன் செல்லும் வேளையில்
எனை பார்த்து சிரித்து செல்கிறாய்
கோவிலுக்குள் நான் புகுந்தால்
எந்தன் அருகிலே வந்து நிற்கிறாய்
தொலைபேசி நன் பேசும் தருணம்
முகம் வாடி செல்கிறாய்
புத்தாடை அணிந்து வந்தால்
அழகாக இருக்கிறது என்கிறாய்
இத்தனையும் யோசித்து பார்த்தால்
என்னவென்று நான் நினைப்பது?...
இருவு வேளையில் நட்ச்சதிரன்களாய்
களவு செய்கிறாய் என் இதயத்தை..
உன் புது உறவு வந்ததும் மறந்தே
போனேன் எனது குடும்பத்தை
உன்னை மறந்து செல்வதா?
அல்ல மணந்து கொள்வதா?....

பதில் ஏதுமே புரியாமலே தனியாய் தவிக்கின்றேன்
இதில் முடிவேதும் தெரியாமல்
எப்படித்தான் உயிர் நான் வாழ்வது?...
வேண்டாம் என்றும் பிடிக்கவில்லை என்றாவது
பதில் சொல்லடி உன்னை மறப்பதிற்கு....

தன்னையும் ஒருவன் காதலித்தானே உண்மையாக என்று,
என்றாவது உன் நினைவில் வரும்
அந்த நாட்களில் உன்னிடம் வாழ்ந்தால் போதும்....
உன்னை தொடர்ந்தே வந்த இந்த உயிர் தொலைந்தே போகட்டும்........
உன் பின் சுற்றி வர பெரியோர் அறிவுரை எல்லாம்,
என் செவிக்கு ராகமாக தெரிகிறதே...
இந்த சித்தரவதை எல்லாம் இன்னும் எத்தனை நாட்களுக்கோ...
வேண்டாம் பெண்ணே எனை விட்டு விலகிப்போ
நான் நானாகவே இருக்கின்றேன்..
எதற்கு என் விழியில் தோன்றினாய்
என் மனதை விட்டு தொலைந்துபோ..
என் பெற்றோரின் கஷ்டம் புரிந்து விட்டது
என் மனதை விட்டு பிரிந்து செல் அல்ல
யாரையாவது விரைவில் மணந்து பறந்து செல்..

பதிந்து போன மனதில் உன் நினைவுகள்
கரைந்து செல்வது கடினம்தான் இருப்பினும்,
உன்னை மறக்க முயற்சிக்கிறேன் அடியோடு,


ஆனால்,அன்பே

பழுதடைந்த என் இதயத்திற்கு
நீதான் காரணம் என்பதையாவது,
ஒப்புக்கொண்டுவிட்டு எனை நீங்கி செல்லடி என்............

எழுதியவர் : சி.பொற்கொடி (அறியுர்பட்டி (21-Sep-12, 12:12 pm)
சேர்த்தது : porkodi
பார்வை : 419

மேலே