காத்திருந்து.. காத்திருந்து..
ஊரிலிருக்கும் தாய் தந்தை, ஊடல் கொள்ளும் காதலி, போன் பேசுகையில் பொம்மை கேட்கும் அண்ணன்மகன் இவர்களில் யாரைப்பற்றி கவிதை எழுதலாம் என்று நினைக்கும் வேளையில் அம்மாவிடமிருந்து அழைப்பு, ''சாப்டியா ?'', ''தலைக்கு எண்ணெய் வை'',..., அம்மா பேசி முடிக்கையில் அவளிடமிருந்தது வந்தது குறுந்தகவல் ''என்ன பண்ணுற ?'', வீதியில் விளையாடிய குழந்தை விபத்திலிருந்து தப்பிய செய்தி வெளியே கேட்டது . நினைவில் வந்தான் அண்ணன் மகன். யாரேனும் ஒருவரை பற்றியாவது ஒரு வரியாவது எழுதிட நினைத்தேன் .. கடைசியில்..! கவிதை எழுத எடுக்கப்பட்ட காகிதம் பேனாவின் முத்தத்திற்காக காத்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்...