நம் ஈழம்

நம் ஈழத்தமிழனின் வீரம் தெரியாமல்
கோழை தனமாய் கொன்று புதைக்கும் சிங்கள ராணுவம்

ஆனவம் கலந்த அரசியலில் ராணுவம் புகுத்தி
நம் ஈழத்தை வீழ்த்துகிறது

சிங்கள ராணுவ துப்பாக்கிகளின் ரவைகள்
நம் ஈழத்தமிழனின் குருதியின் சுவையை காணவா பாய்கிறது

ஒரே குளியில் எத்தனை எத்தனை பினங்கள்
கண்டால் உறையும் நம் ரணங்கள்

நம் ஈழர்கள் தீக்குச்சிகள் போல
உறசினால் ஒளியையும் தருவார்கள்
தொட்டால் வடு மறையாத வலியையும்
தருவார்கள்

நம் ஈழக்காட்டை ரத்தக்காடாய் மாற்றி
புழுதிக்காடாக மாற்றும் வரை உங்கள் ராணுவ ஆட்டம் அடங்காதா ?

புலிகள் இல்லாத காட்டில் வேட்டையாடும்
கோழைகள் நீங்கள்

புலியிடம் சிக்கினால்
வலியுடன் இறந்துவிடுவீர்கள்

எழுதியவர் : ராஜ்கமல் (23-Sep-12, 5:59 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 129

மேலே