வீழ்ந்தும் மலரும் பெண்புலிகள்

பெண்புலி விழுமென
நினைத்தால் நீ மூடன்
தானேடா
தங்க தலைவன் காட்டிய
பாதை வணங்கி
போவோம்டா
வீட்டை இழந்தோம்
தாயை இழந்தோம் நாட்டை
மறக்கவில்லையே
அன்பாய் இருந்தோம்
பண்பாய் வளர்ந்தோம்
அண்ணனின் சேய்கள்
நாங்கள் தானே
(பெண்புலி )
கரும்புலி நாங்கள்
வான்புலி விண்மீன்கள்
வழியை மாற மாட்டோம்
கடற்புலி மீன்கள்
சிதறுது கடற்படைகள்
இலட்சியம் துறக்க மாட்டோம்
போரிலே வெல்லலாம்
நாளை நாம் சாகலாம்
தமிழ் உணர்வில் தேய மாட்டோம்
ரத்தங்கள் சிந்தியே
துப்பாக்கி ஏந்தியே
நம் நாட்டை காத்து விடுவோம்