கண்கள்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். குறள் 1084


போர்குணமாய்
பேதையின் -கண்கள்
ஆயினும்
அமைதி தவழும்
அணங்கவள்

முரணாய்
உயிரை பருகவோ -அல்ல
உள்ளம் உருகவோ
ஏனிந்த மறுபாடு
என்னவளே

எழுதியவர் : அ. வேல்முருகன் (25-Sep-12, 2:37 pm)
சேர்த்தது : அ. வேல்முருகன்
பார்வை : 142

சிறந்த கவிதைகள்

மேலே