கசாப்புக் கடையில் கனவான்கள்!
ஞாயிற்றுக் கிழமை
காலையில் கண்டேன் ஒரு காட்சி!
அறுபடப் போவதை அறியாமல்
அசை போடும் வெள்ளாடு
அந்தோ பரிதாபம்!
கத்தியைத் தீட்டும் கருணாமூர்த்தி!
கசாப்புக் கடையில் காத்திருக்கும்
கனவான்கள் கூட்டம்,
புத்தியைத் தீட்டப் போகிறார்களா!
கத்தியைத் தீட்டப் போகிறார்களா!!