நான் மீட்டும் வீணை
கவிதை
நான் மீட்டும் வீணை
மாலையில் மலர்பந்தலில்
மனத் தென்றல் வீசும் பொழுதினில்
நான் ரசித்து எனக்காக
வாசித்த வயலின் இசை
என் மௌன சுரங்களின்
ராக ஆலாபனை
உனக்கென்றும் எனக்கென்றும்
வேறு வேறாக
நாதங்கள் பேசுவதில்லை வீணை
பேசினால்
நாதங்களில் வழித் தடம் பற்றி
நடக்கவில்லை என்று பொருள்.
----கவின் சாரலன்