மழைக்காலம் - பாகம் 5

பயணம் முடிந்தது................ஆனால் சிறிது தூர நடைப்பயணம்.இதோ வந்துவிட்டது "எங்க வீடு".
ஆதரவற்றோர் இல்லம்.அஜயும் அவனது நண்பர்களும் இதுபோன்ற சிறிய மற்றும் நிதியுதவிகள் சரியாகப் பெறாத இல்லங்களைத் தேர்ந்தெடுத்து அதற்குத் தேவையான நிதிகளை ஏற்பாடு செய்து தருவது வழக்கம்.இந்தமுறை குருவித்துறையில் அமைந்த இந்த இல்லத்திற்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்து தர இந்தப் பயணம்.இல்லத்தை நெருங்கியதும் நல்ல வரவேற்பு.அனைவரும் அங்குள்ள குழந்தைகளுக்கு தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.பிறகு அன்று அஜயின் குழுவின் சார்பில் குழந்தைகளுக்கு விருந்து.அந்த விருந்தில் அவர்களும் பங்கு கொண்டனர்.பார்த்து பார்த்து வாங்கிய பரிசுப் பொருள்கள் அனைத்தும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.பிறகு விளையாட்டுகள் ஆரம்பம்.அஜய் , அவனது நண்பர்கள் மற்றும் அங்குள்ள சிறுவர்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாட , ஜானவி அதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறு அங்குள்ள ஒரு மர பெஞ்சில் அமர்ந்திருந்தாள்.சற்று நேரத்தில் அவளைச் சூழ்ந்து கொண்ட சிறுமிகள் அவளிடம் கைகளில் மெகந்தி போட்டுவிடுமாறு வற்புறுத்த பின் ஒவ்வொருவருக்கும் அவள் போட்டுவிட்டுக் கொண்டே அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்.அஜய் பார்க்காத நேரத்தில் அவளும் , அவள் பார்க்காத நேரத்தில் அவனும் ஒருவரையொருவர் மறைமுகமாகப் பார்த்துக் கொண்டதில் ஒரு சின்ன சந்தோசம்.இப்படியே சில மணி நேரங்கள் ஓடிப் போனது.மாலை நேரக் காபியோடு இல்லத்தின் நிறை குறைகள் பற்றி பேசப்பட்டது.அவர்கள் தங்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் ஜானவி மட்டும் அந்த இல்லத்தின் உரிமையாளரோடு தங்குவற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.பயணக் களைப்பில் அனைவரும் அன்று இரவு நன்றாக உறங்கிப் போனார்கள்.மறுநாள் இல்லத்தில் அனைவரும் ஒன்று கூடினர்.அன்று அவர்கள் அந்த இல்லத்தின் கல்வி நிலை பற்றி தெரிந்துகொண்டனர். அங்குள்ள சிறுவர்கள் அருகிலுள்ள பள்ளிக்கு சென்று வருவது தெரிந்தது.மேலும் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் அதற்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும் நல உதவிகள் பற்றியும் எடுத்து சொல்லப்பட்டது.பிறகு பள்ளிக்கு செல்வோர்கள் அவர்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றனர்.
பின்பு வழக்கம் போல் விளையாட்டு மிச்சமிருக்கும் சிறுவர்களோடு.இன்று இரவு எப்படியாவது ஜானவியோடு பேச வேண்டும் என்று அஜய் தீர்மானித்துக் கொண்டான்.அஜய் என்று அழைத்த குரல் வரும் திசையில் பார்க்க ஜானவி.என்ன ஜானவி ஏதாவது வேண்டுமா என்றான்.இல்லை இன்று இரவு நான் உங்களிடம் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.பேசலாமா என்று கேள்விக்குறியோடு அவனை நோக்க , அட இது என்ன மாயம் நான் நினைத்ததையே அவளும் சொல்கிறாளே என்று ஆச்சரியக் குறியோடு அவளை நோக்க இருவரது பார்வைகளையும் கலைக்கும் விதமாய் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சிலபேரை அந்த இல்லத்திலிருந்து ஓடிவந்து வரவேற்றனர்.இவர்களும் இல்லத்திற்கு உதவும் நோக்கத்தில் அடிக்கடி வந்து போவதாக பேச்சு அடிபட்டது.புதிதாக வந்தவர்கள் அஜய் மற்றும் அவனுடைய நண்பர்களின் இது போன்ற செயல்களைக் குறித்து பாராட்டியதோடு அவர்களை ஊக்கப்படுத்தினர்.அன்றைய பொழுது அவர்களோடு முடிந்து போனது.வந்தவர்களை வழியனுப்பிவிட்டு ஜானு என்று அழைத்தவனைக் கண்டதும் தன் கைப்பேசியில் அவசரமாக எதையோ மாற்றிக்கொண்டே என்ன அஜய் என்றாள்.என்கிட்டே ஏதோ பேசணும்னு சொன்னேல இன்னும் கொஞ்ச நேரத்துல பள்ளிக்கு போன பசங்க திரும்ப வந்துடுவாங்க .அவங்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகள் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு.அது முடிஞ்சதும் பேசலாம்.சரிதானே என்றவனிடம்.இல்லை நாளைக்குப் பேசுவோமா கொஞ்சம் தலைவலி என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.இவளைப் புரிந்துகொள்வது சற்று கடினம் தானோ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் .............................தொடரும்.

எழுதியவர் : (26-Sep-12, 9:57 pm)
சேர்த்தது : KS அம்பிகாவர்ஷினி
பார்வை : 122

மேலே