திலீபா.................

உண்ணாமல் உயிர் துறந்தாய்
அண்ணா
நீ எங்கள் உணர்வுக்கு உயிர் கொடுத்தாய் !

இலக்கை தேடி
அகிம்சையின் வழியில் முயற்சித்தாய்
உந்தன் அடிசுவட்டில் பயணிக்கிறோம்
இலக்கை நோக்கி !

வேறு வழி இல்லாமல்
அகிம்சை வழியில் !

உணர்வை எழுப்ப உன் நினைவே போதும்
உலகை எழுப்ப உன் வழி போதுமா ?
விடை தெரியாமல் முழிக்கிறோம்
உன் படத்தைப் பார்த்து !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (26-Sep-12, 9:37 pm)
பார்வை : 107

மேலே