திலீபத்தீ
பசித்தீ வளர்த்து
போசித்தாய் தமிழ்மானம்
வேஷத்தீ வெறுத்து
போதித்தாய் தன்மானம்
திமிர்த்தீ பெருக்கி
சாதித்தாய் உன் திண்ணம்
தமிழ்த்தீ பரப்பி
சாய்த்திட்டாய் பலர் எண்ணம்
தியாகத்தீ புகட்டி
உசிப்பிட்டாய் எம் உணர்வு
வேண்டும் நீ எமக்கு
மீண்டும் பசித்திருக்க அல்ல..
சுதந்திர சோறூட்டி உன்
கால்களிலே சிரம்தாழ்த்த....

