துளிப்பாக்கள் - IV - கே.எஸ்.கலை
பாதையில்
ஊர்ந்துபோகும் கர்ப்பிணி
பேருந்து !
•
மூளை
இல்லாத மனிதன்
ரோபோ !
•
மூளை
இருக்கின்ற இயந்திரம்
மனிதன் !
•
கனவுச் சுமையால்
தள்ளாடிக்கொண்டே போகிறது
கப்பல் !
•
மனிதனால்
நோயாளியானது இயந்திரம்
வைரஸ் !