விடிவு
நான் நீருக்குள் நீரை தேடுகிறேன்
நெருப்பையே நெருப்புக்குள் போடுகிறேன்.
ஊர் செல்ல வழிகேட்டு ஊராரிடம் கேட்கிறேன்
ஊர் ஊராய் திரிந்து உத்தமரைத் தேடுகிறேன்.
மதங்கள் பிரித்துவைத்து பார்க்கவில்லை .
மதம் பிடித்த உன்னிடம் நியாயமில்லை.
பொன்னுண்டு பொருளுண்டு உன்னிடத்தில் போதாமல் சாத்தானும் உன்னகத்தில்.
ஊரறிய நீ பேருக்கு பணக்காரன்
உண்மைசொன்னால் பிச்சைக்காரன்.
நீ உயிரிருந்து பிணமானாய்
உதவாமல் போன ரணமானாய் .
உன்னை நான் வெறுக்கிறேன் -உன்
நிழலைத்தான் நேசிக்கறேன் .
நிழல் சுடுவதில்லை.
அது அழுவதில்லை .
நிழல் கொல்வதில்லை.
துரோகம் செய்வதில்லை.
நிழலுக்கு லஞ்சமில்லை
லஞ்சமில்லையேல் நீயில்லை.
எழு- கண்விழி -இன்னும்
ஏனிந்த இருட்டு தூக்கம்
அதோபார் உன்னில் ஒருவன்
போய்விட்டான் செவ்வாய் பக்கம்.

