காதலுடன் நீ
நீ என்னை பார்க்க நினைத்தால்
என் கண்ணை மட்டுமே பார்த்து பேசு
எதற்க்காக
சாய்த்து கொண்டு
துணைக்கு ஆள் தேடும்
காற்றில் ஆடும் கோடி போல கிடக்கும்
போலியோவிற்கு உறவான
என் கால்களையே பார்க்கிறாய்?
இந்த நிகழ்வை
நான் எப்படி காதலுடன் நீ
பார்ப்பதாக நினைக்க முடியும்?

