ஏழை சொல்

எங்கள் ஊர்
ஜோதிடன் பெயர் ஏகாம்பரம்
ஏகத்துக்கும்
பொய்சொல்லும்
பீதாம்பரம்

மாடி வீடு
கூடும் கூட்டம்
அப்பப்பா

ஐம்பது ருபாய்க்கு
ஆயிரம் போய் சொல்லி
பொருந்தா ஜோடியை
சேர்த்துவைப்பான்

அடுத்த நிமிடம்
ஐநூறு ரூபாய்க்கு
அவர்களை
கெடுத்துவைபான்

அகண்ட வாயில்
அத்துனை
சொற்களும்
பொய்யென்றால்
அதனை கேட்க்க
அப்படி கூட்டம்
வருவதுண்மை

பொய்யை கூட
மெய்யாக்கும்
அவன்
திறமையினால்
அவனது சொற்கள்
அமபலமேரி
வருகின்றது

அடுத்த வீட்டில் அய்யர்
ஒருவரும்
பார்பார் ஜாதகம்

சரியாய் பார்த்து
பலன் சொல்வார்
பணத்தை பார்த்து
பதில்
சொல்லமாட்டார்
ஆனால்
எவரும் அவரை
அய்யரே என
வருவதில்லை

ஏழை சொல்
அம்பலம் ஏறாது
என்பது
இதுதானோ

எழுதியவர் : (29-Sep-12, 8:55 pm)
சேர்த்தது : m arun
Tanglish : aezhai soll
பார்வை : 204

மேலே