விஷக்காற்று

விஷக்காற்று

[அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்]

மார்கழி மாதம் ஓர்நாள் மனங்கவர் மாநகர் போபால்
ஊர்மிக வடங்க மக்கள் உண்டபின் உறக்கம் கொண்டார்
வார்முகில் சேர்ந்து வந்தே வதைகுளிர் கூடும் வேளை
கார்பைடு தொழில்ச்சா லையிலே கடுங்கொதி கலனு டைய

வந்தது சயனைட் வாயு வளர்ந்தது காற்றில் கலந்து
தந்தது எரிச்சல் புகைச்சல் தவித்திட மக்கள் அலறி
நொந்திட துடித்து வீழ்ந்து நொடிந்தனர் பல்லா யிரம்பேர்
சிந்தையே செய்முன் கர்ப்பச் சிசுவையும் அழித்த தன்றோ .

அண்மையில் சென்னைக் அருகில் அமைந்த வோரிடந் தன்னில்
வண்மையாய் விசவாய் வென்ற வதந்தியே விரைந்து பரவ
உண்மையில் போபால் போலென உணர்ந்ததால் மக்கள் ஓட
திண்மையாய் அல்ல வென்றதால் திரும்பியே மீண்டும் வந்தார்

காட்டினில் தெளிக்கும் கொல்லி கனிம ரசங்கள் எல்லாம்
நாட்டினில் காற்றில் கலந்து நலமதைக் கெடுக்கும் கூறாம்
வீட்டினில் அடிக்கும் நிறங்கள் வீரிய வோர்னிஷ் எல்லாம்
கேட்டினைத் தரும் பென்சீன் கெளோரைட் விடங்கள் தானாம்

தொழில்கள் பெருகப் பெருகத் தொல்லையே கூடல் கண்டோம்
கழிவுகள் அதிகம் ஆவதால் காற்றினில் மாசுகள் கலந்து
அழிந்திடும் ஓசோன் படலம் ஆதலால் வெட்பம் ஏறியே
இழிநிலை வருமிங் கொருநாள், இன்றே மாசினைத் தடுப்போம்
----- Dr. சுந்தரராஜ் தயாளன்

எழுதியவர் : Dr. சுந்தரராஜ் தயாளன் (1-Oct-12, 6:59 pm)
பார்வை : 145

சிறந்த கவிதைகள்

மேலே