ஒருமைப்பாடு
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருமைப்பாடு
[அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்]
கள்ளம் கபடம் ஏதுமின்றி
--------------கருத்தாய் கையினில் குழலுடனே
பள்ளிக் கூடம் போகுமிந்தப்
--------------பையன் அழகைப் பார்த்தீரோ
வெள்ளை நிறத்தின் நேரெதிராய்
--------------வேற்றுடை யணிந்த பேகம்மிவர்
வெள்ளிடை மலைமேல் விளக்கெனவே
---------------வியப்பில் நமையே ஆழ்த்திவிட்டார்
----- Dr சுந்தரராஜ் தயாளன்