மனிதர்கள்....

மரத்தை வெட்டி..
மகிழ்வாய் விற்றோம்!
மணலை அள்ளி..
புனலைக் குலைத்தோம்
மண்ணின் மடியில் ..
பிளாஸ்டிக் விதைத்தோம்!
தனலை நாளும்
பூமியில் வளர்த்தோம்!
பூமி பந்தை..
பொசுங்கிட வைத்தோம்!
காற்றில்கூட
கரியமிலம் கலந்தோம்
காடுகள் சிதைய ..
கழனிகள் அழிய..
ஆன்டெனாக் கம்பிகள் ..
ஆதிக்கம் வளர்த்தோம்!
காசுக்காய்...
ஆசைகள் பொங்க
தண்ணீரைக் கூட
பாட்டிலில் அடைத்தோம்!
இயற்கைக்கு எதிராய்
எல்லாம் செய்தோம்..
இயல்பாய் இங்கே..!
மலைகளும் அழிந்தது..
மழையும் தொலைந்தது..இன்று!
காக்கைக்கும் ..காக்கைக்கும்..
கல்யாணம் செய்து..
கழுதைக்கும் ..கழுதைக்கும்..
தாலி கட்டி..
மழையை வேண்டி..
வானைப் பார்த்து...
மனுசனும்...மனுசனும்..
ஏங்கி..நிற்கும்...
மனிதர்கள் ஆனோம் ..
பூமியிலே....