அட்டைக் கத்தியால் ஜெ.அம்மையாருக்கு கொம்பு சீவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்..?! ஈழதேசம் செய்தி..!

ஜெ. நினைத்தால் கூடங்குளம் போராட்டத்தை ஒரே நாளில் ஒடுக்கி விடுவார், தமிழர்களை வைத்து அரசியல் நடத்தாதீர்கள், கூடங்குளம் போராட்டம் முதல்வர் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கடந்த இரண்டு நாட்களாக பேசி வருகிறார் இளங்கோவன், நேற்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்து, விரைவில் மின் உற்பத்தியை தொடங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தான் இவ்வாறு செப்பியுள்ளார் இளங்கோவன்,

தமிழகத்தில் கடந்த காலத்தில் ஆட்சி செய்த ஒரு குடும்பத்தின் ஆட்சியில், ஏழு மணி நேரம் மின் வெட்டு செய்யப்பட்டதால், தமிழக மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மக்களையே தனது குடும்பமாக எண்ணி மக்களின் துயரை போக்குவார் என்று எண்ணி ஜெயலலிதாவை ஆட்சி பொறுப்பில் ஏற்றி உள்ளார்கள் தமிழக மக்கள் என்றும், தமிழகத்தின் மின் பற்றாக்குறை 3400 மெகா வாட்.கூடங்குளத்தில் மின் உற்பத்தியைத் தொடங்கினால் தமிழகத்துக்கு 1000 மெகா வாட் கிடைக்கும், எனவே கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான இந்த போராட்டத்தை ஒடுக்க போலீஸ் சாருக்கு ஜெயலலிதா உத்திரவிட வேண்டும், போலீஸ் சார் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த போராட்டத்தை முடித்து விடுவார்கள் என்றார்.

கொஞ்ச நாட்களுக்கு முன் ஜெ.அம்மையார் மத்திய அரசை அதாவது சோனியா ஜி அரசை குறை கூறியபோது, ஆட்சியை நடத்த முடியவில்லை என்று சொல்லிப்பாருங்கள் அடுத்த வினாடியே மத்திய அரசு துரிதமாக செயல்படும் என்று கூறினார். காவிரி நீர் விட மாட்டேன் என்று கூறுகிற கர்நாடக மாநில பி.ஜே.பி ஆட்சியை கலைத்து கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றார். கவர்னர் ஆட்சி கொண்டு வந்தால் காவிரி தண்ணீர் கொடுத்து விடுவார்களா என்ன..? கருத்து தானே..! காசா...பனாமா... வாயில் இருந்து காத்துப்போல வெளிவரும் வார்த்தை தானே..என்று கருதி சொல்லியிருப்பார் இவ்வாறு.

கன்னட அமைப்புகள் அனைத்தும் பெங்களூரு தமிழ் சங்கத்தை மிரட்டியவுடன் அவர்களும் வீதியில் இறங்கி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று போராடியுள்ளார்கள் நேற்று. பெங்களூருவில் தமிழர்கள் அனைவரும் காவிரி நீர் வழங்கக் கூடாது என்று போராடவேண்டும் என்று மிரட்டி இருக்கிறது கன்னட அமைப்புகள். கர்நாடக காங்கிரஸ் அரசு தமிழகத்திற்கு நீர் விடவே கூடாது என்று தீவிரவமாக போராடி வருகிறது. இது குறித்து எதற்கு கருத்து சொல்ல வேண்டும்..? என்று கருதி கூடங்குளம் போராட்டத்திற்கு எதிர்ப்பாக தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது தமிழக காங்கிரஸ் கட்சி. சரி இவர்கள் சொல்கிறபடியே பார்ப்போம். இரண்டு உலைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் மின்சாரம் சுமார் 1000 மெகா வாட் மின்சாரத்தை தமிழகதிற்கு வழங்குவோம் என்று இளங்கோவன் சொன்னால் கேட்டுக் கொள்வார்களா..? அணு மின் நிலைய அதிகாரிகள் கூட்டம்.

இரண்டு உலைகளும் தலா 500 MW மின்சாரம் தயாரிக்கிறார்களா..? அல்லது தலா 1000 MW மின்சாரம் தயாரிக்குமா..? அப்படியெனில் இரண்டு உலைகளையும் சேர்த்து 2000 MW அல்லவா கிடைக்கும்..? பிறகு ஏன் 1000 மெகா வாட் என்று சொல்கிறார்கள்..? இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்று இருக்குமோ...சும்மா சொல்லி வைப்போம்..எவன் நம்மை சட்டையைப் பிடித்து கேட்கப் போகிறார்கள் என்ற குருட்டு தையிரியமாக இருக்குமோ..? அணுமின் நிலையங்களில் தயாரிக்கப்படும் மின்சாரம் நேராக தமிழ் நாட்டிற்கு கொடுத்து விட்டு தான் மறு வேலை வேட்டிகளை பார்க்கப்போவதாக வே.நாராயணசாமியும் இளங்கோவனும் பேசுவது பச்சைப் பொய்.

அணு உலைகளில் மின்சாரம் மட்டுமே தயாரிக்கிறார்கள் அல்லது உற்பத்தி செய்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த பொய்..அணுகுண்டு தயாரிக்கவே அணு உலைகள் கட்டப்படுகின்றன. ரசியாக்காரனுக்கு ஒரு ஐம்பது அணுகுண்டு செய்து கொடுத்தால் இந்தியாவுக்கு ஒரு இரண்டு அணு குண்டுகளை ஓசியில் கொடுக்கப் போகிறது ரசியா. சரி அணுகுண்டு வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறது..? இந்திய அரசு...இது வரை வைத்துள்ள அணுகுண்டுகள் மொத்தத்தையும் ஆயுத பூஜைக்கு பொட்டு வைத்து பூ வைத்து உள்ளே வைத்து பூட்டி விடப்போகிறார்கள். தற்போது கைவசம் உள்ள அணைத்து அணுகுண்டுகளும் துருப்பிடித்து காயலாங் கடைக்கு கூட எடைக்கு போட முடியாத நிலை என்று இருக்கையில் புதிதாக எதற்கு அணு குண்டுகள்..? என்று இப்படி சொல்லிப்பாருங்கள் ஆட்சியில் இருப்பவர்களிடம்...கத்தி கடப்பாரை கோடாலி களை தூக்கிக் கொண்டு ஓடிவருவார்கள் அடித்து கொல்வதற்கு ..!

கமிசன் கொடுப்பதையா கெடுக்கப் பார்க்கிறாய்..? எங்களுக்கு தெரியாதா..எது நாடு..? யார் மக்கள் என்பார்கள். ஆட்சியை நடத்தும் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் கமிசன், கட்சியின் கடைசி ஊழியன் வரை செல்லும், அல்லது இந்த கமிசன் வாங்கும் செயலுக்கு பலத்த குரல் கொடுத்தால் வேறு ஏதாவது கட்சியில் செல்வாக்கு, பதவி, சலுகை கிடைக்கலாம். எனவே தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சப்போர்ட் செய்கிறது அணுமின் நிலையத்தை. இவ்வாறு நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு நிமிடத்தில் போலீஸ் சார் ஒடுக்கி விடுவார் என்று கூறுகிறாரே இளங்கோவன்... அது எப்படி..?. ஒரு நிமிடத்தில் ஒடுக்க வேண்டும் என்றால் அனைவரையும் பீரங்கிகளை வைத்து சுட்டுக் கொன்றால் தான் முடியும். இலங்கையில் இப்படிதானே கொன்று ஒழித்தோம் யுத்தத்தின் கடைசி நாட்களில் தமிழ் மக்களை, அந்த அனுபவத்தில் சொல்கிறாரோ இளங்கோவன்..? மக்களை கொன்றாவது கமிசன் வாங்க வேண்டும் என்று கட்சியின் தொண்டன் பாடுபடுகிறான் தலைமைக்கு விசுவாசமாக.

அதுதான் நிறைய துறைகளில் கமிசன் வாங்குகிறீர்களே..அது போதாதா..? தலைவர் சு.ப.உதயகுமார் மற்றும் மக்கள் கூறுவது போல, சும்மா துருப்பிடித்து கிடக்கப் போகும் அணு குண்டுகளை உற்பத்தி செய்வதற்கு ஏன் அணு உலையை திறக்க வேண்டும்..? மூடி விட வேண்டியது தானே..! என்கிறார்கள். இவர்கள் சொல்லும் கூற்று சரிதானே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எழுதியவர் : மாயாண்டிக்கருப்பு (4-Oct-12, 3:48 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 171

சிறந்த கட்டுரைகள்

மேலே