ஏழையின் கனவு

ஒரு இளைஞனின் கனவு
பெரும்பாலும்
காதல்
சில்மிசமாகதான்
இருக்கும் !

ஒரு கலைஞனின் கனவு
பெரும்பாலும்
ஒரு சிறந்த கலைஞன் என்று
பெயரெடுக்க வேண்டும்
என்பதாகத்தான் இருக்கும் !

ஒரு அரசியல்
தலைவனின் கனவு
தேர்தலில் போட்டியிட்டு
ஜெயித்து ஆட்சியை
பிடித்துவிடவேண்டும்
என்பதாகத்தான்
இருக்கும் !

ஒரு விவசாயின் கனவு
வானம் பொழிந்து விடாதா
பூமி விழைந்து விடாதா
என்பதுதான் !

ஆனால் !

ஒரு ஏழையின் கனவோ

மூன்று வேளை உணவு
என்றாவது ஒருநாள் இந்த
பாழாய்ப்போன
வயிற்றுக்கு
கிடைத்து விடாதா
என்பதுதான் !
-------------------------------------------------
அன்புடன் - சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (4-Oct-12, 5:50 pm)
Tanglish : yezhaiyin kanavu
பார்வை : 389

மேலே