அதிகாலை கனவு

இப்பிரபஞ்சத்தில்
தலையை விரித்துப்போட்டு
பேயாட்டம்
போட்டுகொண்டிருக்கும்
லஞ்சம் ஒழிந்ததாய்!

ஏழையின் வயிற்றில்
கொழுந்து விட்டு
எரிந்துகொண்டிருக்கும்
பசி,பட்டினி,பஞ்சம்
என்ற தீ அணைந்ததாய் !

நாட்டை ஆழும்
அரசியல் தலைவர்கள்
கோட்டையை பிடிப்பது மட்டும்
குறிக்கோளாக கொள்ளாமல்
தன்னை தேர்தெடுத்த
மக்களுக்கு
நன்மை செய்வதாய்!

தகதகக்கும் வெயிலில்
காத்துகொண்டு
தண்ணீருக்காக ஏங்கும்
காலி குடங்கள்
நிரம்பி வழிவதாய்!

பருவத்திற்கு வந்த
மங்கைகள்
முதிர்கன்னியாய்
யாரும் இல்லாமல் போனதாய் !

தன் இளமை காலத்தில்
ஓடி ஓடி உழைத்து
ஓடாய் தேய்ந்து
பிள்ளைகளை ஆளாக்கி
படிக்க வைத்த
பெற்றோர்களை
வயதான காலத்தில்
பிள்ளைகள்
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பததாய் !

இப்படி
நான் கண்ட
இந்த கனவுகள்
பலிக்குமாயின்
இந்த இனிமையான

கனவுகளை கொடுத்த
அந்த அதிகாலைக்கு

என் ஆயிரமாயிரம்
நன்றி உரைப்பேன் !

-----அன்புடன் .சிங்கை கார்முகிலன்

(குறிப்பு:- எனது இந்த கவிதை பாக்யா வார இதழில் பிரசுரம் ஆனது )

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (4-Oct-12, 5:34 pm)
Tanglish : athikalai kanavu
பார்வை : 215

மேலே