பூப்பது எப்படி ?
 
            	    
                இரவு நேரம் 
இரு விழிகளும்  இனைய 
விடியல் மெல்ல நெருங்கி 
பிரித்து விட 
மொட்டுக்கள் பூவாகும் 
ஓசை மட்டும் கேட்கவில்லை 
வண்ணங்கள் பூசிய தேவதை 
எப்படி மலர்கிறாள் 
என வியக்கிறேன்! 
வண்டுக்கு மட்டும் 
எப்படி காற்றில் தூது ?
இது இயற்கை மனிதனுக்கு 
காட்டும் கண்ணாம்பூச்சி ஆட்டமோ?
எனக்கு ஒரு கர்வம் உண்டு 
அழகில் சிறந்தவளாய் இருந்தாலும் 
நீ குடியேறும் இடம்
பெண்ணின் கூந்தல் தானே !
பெண்ணுக்கு காத்திருந்து 
நீ உதிர்ந்த கதை 
எனக்கு தெரியும் !
ஆனால் ஒன்று மட்டும் 
எனக்கு பொறாமை !
அழகை சுமப்பவள் எப்படி 
தேனையும் சுமக்கிறாள் என்று !
	    
                
