என் இறுதி ஊர்வலம்
தலைமை
நீதிபதியாய்
இருந்தேன்!
தனக்கு
நீதிகேட்டு
தானே
பல்லக்கில்
பாடை ஏறுகிறேன்!
பஞ்சம் பிழைக்க
வந்து
பரதேசியாய்
போகிறேன்!
உயிரை
விட்டெறிந்து
ஊதாரியாய்
திரிகிறேன்!
மயிரை விட்டெறிந்து
மண்ணை
தின்னப்போகிறேன்!
உடலை
விட்டெறிந்து
ஊர்வலம்
வருகிறேன்!
உனக்கு
மாலை சூட
உலக்கரிசி
தருகிறேன்!
எனக்கு
எட்டரிசியாவது
தருவாய் என்று
வருவாய்
சேர்க்கப்போகிறேன்!
உன்
கண்ணெதிரே
நான் வர
கண்ணுக்கெட்டா
துரம்
போகிறேன்!
ஊரான் வீட்டு
இலவுக்கு
தலைமை
வகிக்கிறேன்!
இடுகாட்டுத்
தலைவனாய்
பதவி வகிக்க
தலையை
வைக்கிறேன்!
உடன்கட்டையை
உதவிக்கு
அழைக்க
போகிறேன்!
உடன்கட்டை
வரும் வரை
பதவிக்காக பாடை
ஏறப்போகிறேன!
பாடையும் போய்,
பதவியும் போய்,
பரதேசியாய்,
பாவியாய்,
ஆவியாய்
அலைய
போகிறேன்!...
பத்தாம் நாளில்
பயிராகினேன்!
பதினாறாம் நாளில்
பதவி யாகினேன்!
இருபதாம் நாளில்
பாவி யாகினேன்
அறுபதாம் நாளில்
ஆவி யாகினேன்
நூறாம் நாளில்
விதி ஆகிறேன்
நூற்றி ஓராம்
நாளில்
திதி ஆகிறேன்!