வாழிய! வாழிய!! எங்கள் தமிழே.!!!
தாய் தந்த பரிசே
தன்னிகற்ற தமிழே.!
தாரணி தவழும்
தலை மொழி தமிழே.!
யுகம் பல கடந்தும்
முகம் தொலைக்கா யுவதமிழே.!
நின் வழி வந்த மொழிகளை
நிந்திக்காமல் நீ வளர்த்தாய் தமிழே.!
உனைப் பழித்த மொழிக்கும்
பாலூட்டினாய் தமிழே.!
செகமெல்லாம் சிறக்க
செம்மொழியானாய் தமிழே.!
செங்கதிர் போல
செழித்தோங்கும் செந்தமிழே.!
ஆதி முதல் அந்தம் வரை
அகிலம் வாழும் தமிழே.!
வையகம் உள்ளவரை
வாழிய! வாழிய!! எங்கள் தமிழே!!!

