மலரோடு மலராக ....

மலரோடு மலராக
நின்றிருந்தாள்
சிரிக்கும் மலராக
கரங்கள் மலர்களை
அணைத்திருந்தன
இமைகள் மூடிஇருந்தன
இலக்கியமாக
பார்த்திருந்த மலர்கள்
மூடிடவோ அன்றி
திறந்திருக்கவோ என்று
தயங்கி நின்றன

----கவின் சாரலன்

additional ref : info அம்பிகாவின்
உன்னில் உய்வுற்றேன் ....ஊதா பூவே

எழுதியவர் : கவின் சாரலன் (11-Oct-12, 4:05 pm)
பார்வை : 233

மேலே