திருந்திவிட்டேன்

உன்னைப் பார்த்த அந்த முதல் நாள் -
உன் செய்கைகள் அனைத்தையும் இரசித்தேன்,
என்னைச் சுற்றி உள்ள உலகத்தை உன்னால் மறந்தேன் ,
தோழிகள் என்னை அழைத்த போதும் என்னை மறந்தவளாக இருந்தேன் ,

நீ என்னைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு நொடியும் உன்னைப் பார்த்தேன் ,
நீ என்னிடம் பேசவிருக்கும் அந்த நொடிக்காக காத்திருந்தேன் ,,,

உன்னைக் காதலித்துவிடுவேனோ என்று பயந்தேன் ,
உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் என் பயம் அதிகரித்தது ...

எனது பயத்தை மறைத்து உன்னை மிகவும் பிடிக்கும் என்று மட்டும் கூறினேன் , ஆனால்
நீ என்னைக் காதலிப்பதாகக் கூறினாய் ,
உன்னை அந்நொடி நம்பிய என்னை ஏமாற்றினாயே,,,,,////

காதலிப்பதாகக் கூறுயது வெறும் விளையாட்டிற்காக என்று கூறி மகிழ்ந்தாய் ,,
உனது மகிழ்ச்சி என்னை நூறு மடங்கு வேதனையை அடைய வைத்தது,....

அப்பொழுது புரிந்து கொண்டேன்
எனது முட்டாள் குணத்தை ,
ஒருவரை மிகவும் பிடித்தால் அவர்
கூறுவது என்னவாக இருந்தாலும் நம்புவது
முட்டாள்தனம் என்று உணர்ந்தேன் ....,

கண்மூடித்தனம் என்று அறிந்தேன் ,, நீ
வாய்விட்டுச் சிரிக்கும் ஒரு முட்டாளாக
உன் முன் நின்றேன் ,,

இதற்கு மேல் நீ என்ன கூறினாலும் நம்புவேன் என்ற எண்ணம் வேண்டாம் ,,,,,,

திருந்திவிட்டேன்
அதனால் உன்னை மறந்துவிட்டேன்

எழுதியவர் : வே சுபா (12-Oct-12, 9:10 pm)
சேர்த்தது : v subha
பார்வை : 141

மேலே