எம்மொழி
முத்தெடுத்து முக்கடலில்,
மூன்று ஜென்மம் தொலைத்திடுவேன்..
என்றும் முத்தமிழ் செம்மொழி,
என் தாய்மொழி என்றிருந்தால்..
செவ்விதழ் மாதர் முத்தச்சுவை வேண்டாம்,
செவியில் என்றும் முத்தமிழ் சுவை போதுமென்பேன்...
செவ்விழி போல், எம்மொழி எனை ஈர்க்க,
செருக்கு என்றும் குறைவதில்லை, எம் தாய்மொழி தமிழென்பதில்..
வாழும் எம்மொழியோ,
வதினால் முதிர்ந்தது..
வளரும் எம்மொழிக்கோ,
வயதென்றும் பதினெட்டு..
நாளும் வளர்கிறாய்,
காலம் பல கடந்தும்..
நரை மட்டும் எய்துவதில்லை,
இளமை தழும்ப செழிக்கிறாய்..

