பிணக்குறட்டையின் தாலாட்டு(உழவன் ஓதை)

நான் ஒரு
ஏழைவிவசாயி
என்பதைத்தவிர
எனக்கு
வேறு
அடையாளம்
எதுவும் இல்லை.....
. . . . . . . . . . .நன்றி
. . . . . . . .செஞ்சூரியன்
. . . . . . . . .. . . . .. ... . ..
வஞ்சனை
வாயில்
வக்கனைச்சோறு
வாங்கித்தின்ன
வாரீர்!
என்
நெஞ்சணைக்
கூட்டில்
பஞ்ச நிலமும்
பட்டினி கிடக்குது
பாரீர்!
பஞ்சணை
மாடியில்
பல்லாக்கு ஏறி
மல்லாக்க
மண்ணைத் திங்க
போறீர்!
. . . . . .
கதிரவனை
கல்லாக்கினீர்!
நிலத்தினை
கல்லறை
ஆக்கினீர்!
கல்லறையில்
கூடி நின்று
என்னை
கருமம்
முடித்தீர்!.
ஒற்றைச்
சில்லரையை
நெற்றியில் பதித்தீர்!
வெகுவாய்
என்
விரயம் தீர்த்தீர்!
. . . . .
என்
கண்ணகத்திலே
மனக்காணிகள்!
அதினாலே
கண்ணை
பிடுங்கினீர்!
நின்
கைகளிலே
பணக்கோணிகள்!
அதினாலே
மண் அகத்தையே
பிடுங்கினீர்!
. . . . .
நெற்க்கடன்
தீர்த்திட
நேத்திக்கடன்(வட்டி)
வாங்கினீர்!
என் நேத்திக்கடன்
தீர்த்திட
ஏய்த்து
கடன் வாங்கினீர்!
. . . . .
புல்வெளிக் காட்டில்
தீக்குழி வைத்து,
புனைப்பெயர்
பூக்குழி யென்பீர்!
தாய்க்குழியில்
ஏறி
மிதித்துவிழுந்தால்
அதினை
பேய்க்குழி யென்பீர்!
. . . . .
இரத்த மடியை
உரித்தெறிந்து
பெத்த மடியில்
பிள்ளையின்
பிணக்காடுகள்
காணீர்!
. . , . . . .
காணீர் !
காணியின்
கருவூலத்தில்
நெற்றியுடைந்து
முற்றிக்கிடக்கும்
என்
வியர்வைமூட்டைகள்
வீணாவதைக்
காணீர்!
. . .
மேகக்கூரைகளில்
உயரக்கோட்டைகள்
உரசுவதை
காணீர்!
அதினிலே
என்
சருமத்துளைகள்
பருமத்துகள்களாய்
வெடித்திருப்பதை
காணீர்!
. . . .
உளுந்துக்காட்டு,
விந்தை
பிடுங்கியதினால்,
மலட்டுப்பூமியின்
மடியில்,
என்
பிணக்குறட்டை,
தாலாட்டு
பாடுவதை கேளீர்!
தாலாட்டு
கேட்காத
காக்கை
கிளிகளின்
கடுதாசிகள்...
காற்றில்
வேசிகளாய்
அலைவதைக்
காணீர்!
. . . . . . . . .
காணீர்
காணீர் என்று
என்
கண்ணீர் தான்
கருகிப் போனது!
நேரமிருந்தால்
அதையும்
காணீர்!..

எழுதியவர் : ருத்ரா (13-Oct-12, 6:44 pm)
பார்வை : 375

மேலே