வீட்ல
அதிகாலை சமையல் தொடங்கி
பரபரத்து பணி செய்து
பள்ளிக்கு பிள்ளைகளை
பாங்காய் அனுப்பி வைத்து
அடுப்படி வேலைகள்
அனைத்தையும் முடித்து
சிதறிய பொருட்களை
சீராய் அடுக்கி வைத்து
பட்டியலிட முடியா
சில்லறை வேலைகள்
பல செய்து - பசி தீர்க்கும்
பெண் அறிமுக படுத்த படுகிறாள்
" வீட்ல சும்மாதான் இருக்காங்க"