அழுக்கு மூட்டை மனிதன்

கதிரவன்
எரிகிறான்
சாம்பலாக வில்லை!....
. . . . .
எரிமலை
எரிகிறது
சாம்பலாக வில்லை!...
. . . . . . .
இரண்டும்
சேர்ந்து என்
நெஞ்சில்
எரிகிறது!
. . . . . .
நான்
ஏன்
இன்னும்
சாம்பலாக வில்லை!
. . .
கையளவு
கருணையும் இல்லை
என்
கையில்
பிடிச்சாம்பலும்
இல்லை!
. . . . .
என்னைக்
கொண்டு போய்
குழியில் போட
கூலிக்காரனும்
இல்லை!
. . . . . . .
என்
கோவனத்தை
துவைத்து
போட
கேலிக்காரியும்
இல்லை!
. . . . . . .
அழுக்கு மூட்டை
தூக்கிச்செல்ல
எனக்கு
சக்தி
இல்லை
. . . . .
அழுக்குமூட்டை
அது
உங்களின்
மனமூட்டை
என்று
சொல்லவும்
புத்தி யில்லை!
. . . . . .
பத்திய மிருக்க
எனக்கு
வைத்தியம் ஏதும்
இல்லை!
என்னை
பைத்தியமென
நினைத்து
என் பக்கத்தில்
வருவோர்
எவருமில்லை!
. . . . . .

எழுதியவர் : மணவாசல் நாகா (15-Oct-12, 12:22 pm)
சேர்த்தது : Nagaraj Ganesh
பார்வை : 191

மேலே