ஒரு தலை காதல்கள்

நீ
காயிதத்தில்
காதல் சொல்லி
கண்ணீரை சுமக்காதே

நீ
அவள் கண்களுக்குள்
காதல் சொல்லி
கடற்க் கரையில் கிடக்காதே

அவள்
மௌனத்தில் காதல் சொல்லி
முகவரிகள் இழக்காதே

அவள்
இதயத்தில் காதல் சொல்லி
இதமாக துடிக்காதே

அவள் கைகளில் ரோஸ்
கொடுத்து உன்
கைகளை வாட்டாதே

அவள்
கைகளில் உன் கை சேர்த்து
கைவிரலைக் கூட்டாதே

அவள்
காதலை நீ
சுமந்து
சுமை தாங்கி ஆகாதே

அவள்
கூந்தலில்
மலராகி
மாலையில் வாடிப் போகாதே ……

எழுதியவர் : கவி மணியன் (17-Oct-12, 10:36 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 314

மேலே