உன்னக்காக என் வார்த்தைகள்

கொஞ்ச நாட்களாய் நெஞ்சம் உன்னிடம் சொல்லும் வார்த்தை அறிவாயா ???

எனை கொள்ளும் வார்த்தை அறிவாயா ??

பாலையான நிலம் மழையை கண்ட பின் மலர்ந்த பூவை அறிவாயா ?நான் ரசிக்கும் பூவே அதை நீ அறிவாயா ??

பொங்கும் எரிமலையில் நீரை சுரக்குதே ,காரணம் நீ தானே .!
நான் மீண்டும் பிறக்களானேனே...

அந்த தென்றல் எனிடம் வந்து நின்றதும் துக்கம் அதனை துடைத்தேனே.
இன்று தூக்கமதனை தொலைத்தேனே.

நான் தனிமையில் மூழ்கிய நாளில்..ஒரு தோகை வந்த போதில்
மடை திறந்த வெள்ளம் போல் எண்ணங்கள் கரைபுரண்டோடுகிறது.

என் நெஞ்சில் எரியும் தீயை எப்போது அணைப்பாய் சகியே !!!
உந்தன் வழிநோக்கி என் விழி மூடாமல் காத்திருக்கிறேன்.

எழுதியவர் : இளம் கவி அரிமா (20-Oct-12, 12:05 am)
சேர்த்தது : ilamkaviarima
பார்வை : 273

மேலே