!!!இயற்கையோடு நான்!!!

ஆயிரம் கவலைகளை சுமக்கும் மனதை
அழகிய வண்ண மயிலின் இறகைபோல்
இலேசாக்கும் இதமான இளந்தென்றலே
உன்போல் இனிமையாய் எத்திக்கும்
வீச எனக்கும் கற்றுக்கொடு (...)

என்னவனை நினைத்து நடக்கையில்
என்னினியவனின் ஒற்றை முத்தம்போல்
என்மேல் விழும் ஒற்றைமழைத்துளியே
நீயழுது என்னை மகிழச்செய்யும்
மாயமதை எனக்கும் கற்றுக்கொடு (...)

முட்களின் மத்தியில் மொட்டவிழ்த்து
உன்மெல்லிதழை பத்திரப்படுத்தி என்னை
உன்வசம் ஈர்க்கும் ஒற்றைரோஜாவே
உறலில் இருந்தாலும் உன்போல்
உயர்ந்தேவாழ எனக்கும் கற்றுக்கொடு (...)

மதியுள்ள மனிதனுன்னை மிதித்தாலும்
மரமாய் வளர்ந்து நின்று
இளைப்பாற நிழல் தந்து
பசியாற கனிதரும் பச்சைமரமே
உன்பாசமதை எனக்கும் கற்றுக்கொடு (..)

உனை அழிக்கும் கயவர்களையும்
காக்கும் கரம்கொண்ட கள்ளம்
கபடமில்லா எழில்மிகு இயற்கையே
உள்ளமதை உன்போல் கொண்டுவாழவே
உளமார கற்றுக்கொடு எனக்கு(...)

எழுதியவர் : பிரியாராம் (20-Oct-12, 3:38 pm)
பார்வை : 812

மேலே