யார் சொன்னது நான் தாசி என்று
ஒருவனுக்கு ஒருத்தி என்றால்
நான் சீதை
கொண்டவனே கணவன் என்றால்
நான் கண்ணகி
நியாயம் பேசவில்லை
எழுதியவன் செய்த பிழையில்
என் தவறு என்ன
விருப்பம் கொண்டு
சதை விற்க பிறந்தவள் அல்ல
மொட்டு அரும்பும் முன் சிதைக்கப்பட்ட
நீல மலர்
உயிர் பிழிந்து
சுகம் விற்பவள் தாசி என்றால்
சதை தின்ன
வெறிபிடித்து அலையும்
மானுட மிருகங்களுக்கு
என்ன பெயர்
இரவை மட்டும் வாழ்ந்திட
துடிக்கும் இச்சையளர்கள்
உலவுகின்ற நாள் வரை
இயங்கும் இதயம் மறுத்திடும்
நான் தாசி என்பதை
கண் நிறைந்த கணவன்
கவலை மறக்க
மழலை சிந்தும் குழந்தைக்கு
பத்தினி தாயாய்
நாள் கழிக்க ஆசை
மனம் வீசிடும் மலருக்கு
இணையாக காகித பூவாய்
படைத்து உலவவிட்டான்
தினமும் கட்டிலில்
கசங்கிட
கட்டில் கிலி பிடித்து
தேக சூடு தனித்து
இன்பம் பெற தேடி வந்து
போகிறான் காமக் கொடூரன்
எனக்கு தாசி பட்டம் தந்து
அர கிழவனும்
மீசை அரும்பா இளைஞனும்
ஒரே எண்ணம் கொண்டு
பார்க்கிறார்கள்
ஏனோ உலகிற்கு
நான் மட்டும் வேசி