வேலை

பூப்பது மட்டுமே
பூவின் வேலை
அதை
இறைவனுக்கு படைப்பதும்
இறந்தவனுக்கு படைப்பதும்
மனிதனின் வேலை...

உடல் பெறுவது மட்டுமே
உயிரின் வேலை
அதை
உயர்ந்ததாகவும்
தாழ்ந்ததாகவும்
மாற்றுவது
உனது வேலை...

எழுதியவர் : சிவானந்தம் (20-Oct-12, 3:11 pm)
Tanglish : velai
பார்வை : 185

மேலே