விதியோடு போரிடு வா

மதியோடு மண்ணில் வந்தோமே!
மண்ணோடு மக்கிப்போகவா?
விதியோடு போரிடு வா.

விதி கட்டம் அல்ல,
அது சட்டம் போல - அதன்
ஓட்டையிலே ஓடிடலாம்.

ஒரு வட்டம் போட்ட,
உறு வளையும் அல்ல - அதை
திட்டம் போட்டே தாண்டிடலாம்.

இட்ட விதியில் நடக்க,
உரைந்த பனியா வாழ்க்கை?
உடைந்து உருகி ஓடு - பல
கிளைகள் உண்டு மாறு.

இலக்கு கடல், தெரிந்தானபோதும்,
கலக்கும் வழி தேர்வு செய்யு நீயும்,
போகும் பயணம் யாவும்,
வாழும் பயனும் நாளும் சேர்ந்து போகும்.

பாலைவனம் வந்தால் கூட,
பாய்ந்தோடிப்பார் - அதில்
நாளை வனம் வளமாகலாம்.

வேதனைகள் வந்தால் கூட,
முட்டி மோதிப்பார் - சிறு
விரிசல் மெல்ல விரிந்திடலாம்.

மதியோடு மண்ணில் வந்தோமே!
மண்ணோடு மக்கிப்போகவா?
விதியோடு போரிடு வா.

காதல் காயம் தரலாம்,
முடிவு சோகம் தரலாம் - ஆனால்
காதல் மட்டும் முடிவு
என்பதறிவதேது.

காதல் கொண்ட மனிதன் போல,
மோகம் கொண்டு வா - படும்
காயங்களும் காய்ந்திடலாம்.

தோல்வி என்று தெரிந்தும் கூட,
மோதி மோதிப்பார் - வரும்
தோல்விகூட தோற்றிடலாம்.

ஊறும் எறும்பு போல - நீயும்
உறுதி கொண்டால் - இந்த
பூமியையும் கரைத்திடலாம்.

அந்த கோட்டை விட்டா,
அடிகோடிடு வா - மீண்டும்
மார்சில்கூட குடியேறலாம்.

மதியோடு மண்ணில் வந்தோமே!
விதியோடு போரிடத்தான் - வாகை
மண்ணோடு பதிவிட்டு வா



கட்டம் - கட்டாயம்
உறு - துன்பம்
வாகை - வெற்றி

எழுதியவர் : ராஜ ராஜன் (21-Oct-12, 12:43 pm)
பார்வை : 196

மேலே