ஊனமுற்ற பெண்ணை பெண் பார்க்க வந்தார்கள் கவிதைக்கு பதில்...
யாருக்கில்லை ஊனம் இங்கு..
அறிவு திறன் இல்லாதோர்
ஒரு மாற்று திறனாளிதான்...
சபை நாகரிகம் இல்லாதோர்
ஒரு மாற்று திறனாளி தான்...
காசுக்காக கணவனை விடுத்து
அடுத்தவனை தேடும் மனைவி....
சகோதரி வறுமையில் வாடும் போது
கையை இறுக்கி வைத்து கொள்ளும்
ஒரு சகோதரன்,....
தன்னை பெற்ற தாயை
முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டு
செல்லும் தலைகனம் பிடித்த
மகன்,
குடி மக்கள் கஷ்டப்படும் போது
தான் மட்டும் சொகுசு காரில் செல்லும்
ஒரு அரசியல்வாதி,
தன் நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களை
இரக்கமின்றி சுட்டு தள்ளும்
நாட்டின் தலைவன்,
நாட்டின் ராணுவ ரகசியங்களை
அடுத்த நாட்டிற்கு காட்டி கொடுக்கும்
ராணுவ தளபதி....
இப்படி மாற்று திறனாளிகள்
எத்தனை எத்தனை பேர் நாட்டில்???........
உடல் ஊனத்தை
ஒரு வேளை
மருத்துவத்தால்
வென்று விடலாம்...
ஆனால் மன ஊனத்தை எதை கொண்டு வெல்வது.....
அதற்கென்ன மருந்து உண்டு?
சொல் பார்ப்போம்.......