விபத்தில் விளைந்த பாசப்பூ...

ராஜ் பேருந்திலிருந்து இறங்கி வேகமாக கல்லூரிக்கு சென்றான்...
அவனுக்கு. மாதிரித்தேர்வு இருந்து...
அவசரமாக தேர்வுக்குச் சென்றவனுக்கு அதிர்ச்சி ஒன்று வந்தது...
ஆம்..
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுமரிக்கொண்டு ஒரு சரக்கு லாரி வேகம் குறையாமல் தன்னை நோக்கி வருவதைக்கண்டான்...
சட்டென்று நின்று எங்கே ஓடலாம் என்று பார்த்தான்...
ஆனால்,
அங்கே ஒரு குழந்தைத் தனியாக வண்டிவரும் வழியில் விளையாடிக்கொண்டிருந்தது...
வண்டிக் குழந்தையை நெருங்கிவிட்டது. வேகமாக ஓடிப்போய் நூள்இழையில் குழந்தையைக் காப்பாற்றினான்...
உடம்பெல்லாம் காயம் பட்டிருந்தது... லாரி பக்கத்தில் இருந்த மரத்தில் பாய்ந்து நிலைதடுமாரி நின்றது. அதில் இருந்த ட்ரைவர் இறந்து கிடந்தார்...
வேகமாக கூட்டம் கூடியது. வேடிக்கை பார்க்கமட்டும்..
ஆருதல்,பாராட்டு என குவிய குழந்தையைப் பெற்றவர்களின் வார்த்தை அவனை இடியாய் தாக்கியது...
குழந்தைக்கு கேன்சர் அது செத்தாலும் ஒன்னுமில்ல.நீ எதுக்குடா ரிஸ்க் எடுத்த...
வா HOSPITAL போகலாம்...
அப்டியே வர்ர வண்டில தல்லிவிட்டுறலாமானு வந்தது அவனுக்கு...
வேகமாக எழுந்து அந்த குழந்தையைப் பார்த்தான்...
அந்த குழந்தையிடம் சென்று குழந்தைக்கு ஆதரவாய் ஒரு முத்தம் கொடுத்தான்..
அடுத்த நொடியில் அந்தக் குழந்தை அண்ணா நா உன்னோட வரவா பிலீஸ்...
அவனுக்கு உடம்பெல்லாம் தீப்பற்றி எரிவதுபோல இருந்தது...
யோசிக்காமல் வா போகலாம் என்றான்...
அன்புக்காட்டவும் தன் தேவையைத்தேடும் மனிதர்களைக் குழந்தை வெருக்காமல் என்ன செய்யும் பாவம்...
ராஜ் மாதிரித் தேர்வு எழுதமுடியாமல் போனாலும் வாழ்வில் ஒரு முன்மாதிரியாக திகலவேண்டும் என்ற வேகத்திலும்,அந்த குழந்தையின் பாசத்திலும் பரவசமாய் செயல்பட்டுவருகிறான்...
வாழ்க அவன் நல்லுள்ளம்...
வளர்க அவன் புகழ்...